ஆவடி அருகே ஏரிக் கரையில் உடைப்பு – ஏராளமான நீர் வெளியேறியதால் பொதுமக்கள் கவலை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் ஏராளமான நீர் வீணாகியது. கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரி நிறைந்து வந்த நிலையில், இன்று காலையில் கரையில் திடீர் உடைப்பு ஏற்பட்டு, பெருமளவு நீர் வீணானது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தண்ணீர் வீணானதை தடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன