Advertisement

ஆளில்லா குட்டி விமானம், ஓட்டுநரில்லா கார் ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திற்கு காப்பீடு

ஆளில்லா குட்டி விமானம் மற்றும் ஓட்டுநரில்லா கார் ஆகிய நவீன தொழில்நுட்பங்களால் ஏற்படும் சேதங்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் உலக பொருளாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.

டிரோன் எனும் ஆளில்லா குட்டி விமானம் மற்றும் ஓட்டுநரில்லாத தானியங்கி கார் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், அதன் சேதங்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. லண்டனில் உலக பொருளாதார அமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கூட்டத்தில் இந்தியா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்க ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் உலகின் பல முன்னணி காப்பீட்டு நிறுவனங்களும் பங்கேற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன