ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை தொடர்பாக கேரளாவில் அனைத்து கட்சி கூட்டம் – பினராயி அழைப்பு

கேரளாவில் நடக்கும் அரசியல் கொலைகள் குறித்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களுடன் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.

கண்ணூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜேஷ் என்பவர் கொலையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆளுநர் சதாசிவம், முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ஆளுநர் சதாசிவத்தை, முதலமைச்சர் பினராயி விஜயன், டிஜிபி லோக்நாத் பெஹ்ரா ஆகியோர் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் குன்னம் ராஜசேகரன், ஆர்எஸ்எஸ் தலைவர் கோபாலன்குட்டி ஆகியோருடன் முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து ஆகஸ்ட் 6ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கும் முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன