Advertisement
Advertisement

ஆருஷி தல்வார்-ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

இளம்பெண் ஆருஷி தல்வார் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அவரது பெற்றோர் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் இன்று பிற்பகல் சிறையை விட்டு விடுதலையாகின்றனர்.

கடந்த 2008ம் ஆண்டு டெல்லி அருகே நொய்டாவில் இளம்பெண் ஆருஷி என்ற 14 வயது சிறுமி தமது வீட்டின் படுக்கையறையில் கழுத்து அறுபட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர்களது வீட்டில் பணியாற்றிய ஹேமராஜூம் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மொட்டை மாடியில் உடல் மீட்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை வழக்கில் ஆருஷியின் பெற்றோர் ஆணவக் கொலை செய்ததாக உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த சிபிஐ போதிய சான்றுகளை தரத்தவறிவிட்டதாக கூறி நேற்று அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்துவிட்டது. இதனால், ஆருஷியின் பெற்றோர் இன்று பிற்பகல் வீடு திரும்புகின்றனர்.

https://youtu.be/-ffOtbhMyq0

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன