ஆயுள் தண்டனை கைதி நளினி பரோல் கோரிய வழக்கு

ஆயுள் தண்டனை கைதி நளினி பரோல் கோரிய வழக்கில், தமிழக அரசும், வேலூர் சிறை நிர்வாகமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனக்கு 6 மாதம் பரோல் வழங்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் , தனது மகளுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வருவதால், பரோல் வழங்கக் கோரி தமிழக அரசுக்கும், சிறை நிர்வாகத்துக்கும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நளினியின் பரோல் மனு தொடர்பாக, தமிழக அரசின் உள்துறையும், வேலூர் சிறை நிர்வாகமும் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன