ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

ஆதார் அட்டை பெறுவதற்கான காலக்கெடு ஜூன் 30 -ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற ஆதார் கார்டு வைத்திருப்பது அவசியம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, சலுகைகளைப் பெற குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூன் 30-ம் தேதிக்குள் அனைவரும் ஆதார் எண்ணைப் பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு 5 நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, ஆதார் அட்டை பெறுவதற்கான காலக்கெடுவை ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன