ஆண்டிப்பட்டி அருகே குட்கா, பான்மசாலா பொருட்கள் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் கானாவிலக்கு பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த கானாவிலக்கு போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன