ஆணழகன் போட்டியில் பாடி பில்டருக்கு நேர்ந்த சோகம்

தென்னாப்பிரிக்காவில் நடந்த ஆணழகன் போட்டியில், சிறந்த பாடி பில்டர் ஒருவர், வேகமாக ஓடி குப்புற விழ முயன்ற போது, கழுத்துப் பகுதி உடைந்து உயிரிழந்தார். சிஃபிஸோ லுன்கேலோ தபெட் ((Sifiso Lungelo Thabete)) என்ற தென்னாப்பிரிக்க வீரர், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சாகசம் செய்ய முற்பட்டார்.

வேகமாக ஓடி பின் பக்கமாக விழ முயன்ற போது எதிர்பாராத விதமாக கழுத்து உடைந்தது. இதில் சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன