Advertisement
Advertisement

ஆடம்பர வீடுகள் கட்டும் திட்ட மோசடியில் மரியா ஷரபோவா மீது வழக்குப்பதிவு

ஆடம்பர வீடுகள் கட்டும் திட்ட மோசடியில் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டெல்லி அருகே குருகிராம் (( Gurugram )) நகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு Homestead Infrastructure Development என்ற நிறுவனம் ஆடம்பர வீடுகள் கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கான விளம்பரத்தில் மரியா ஷரபோவா பெயரை அந்த நிறுவனம் பயன்படுத்தியது. 2016ல் இந்த திட்டம் நிறைவு பெறும் என்று வாக்குறுதி அளித்த நிலையில் முழுமை அடையவில்லை.

இதனால், பணம் செலுத்தியவர்கள் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி, அந்த கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் விளம்பரத்தில் பெயர் இருந்ததாக மரியா ஷரபோவா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன