ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் மேகாலயாவின் மௌலினாங்

ஆசிய கண்டத்தின் மிக தூய்மையான கிராமமாக மேகாலயாவில் உள்ள ஒரு குக்கிராமம் தேர்வாகியுள்ளது. ஷில்லாங் நகரின் அருகே பசுமை சூழ காட்சிதரும் மௌலினாங் ((Mawlynnong)) என்ற கிராமமே இந்த புகழைப் பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள், சுற்றுச்சூழலை காக்கும்வகையில், சுகாதாரத்தையும், பசுமையையும் பேணி வருகின்றனர். குப்பைகளை வீதியில் வீசுவதைத் தவிர்த்து, ஆங்காங்கே குப்பை கூடைகள் வைத்து சேகரித்து வருகின்றனர். இவற்றில் மக்கும் குப்பைகள் விளைநிலங்களில் உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகள் ஊருக்கு வெளியே கொண்டு செல்லப் படுகின்றன. இவற்றின் காரணமாக, ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் என்ற பெருமையை டிஸ்கவரி இந்தியா என்ற சுற்றுலா இதழ் அளித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன