ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் மக்கள் கருத்தறியும் பயணம் -திருமாவளவன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, மற்ற கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், புதுச்சேரி பாகூர் பகுதியிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாகவும், இதற்காக ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கடலூர், நாகை மாவட்டங்களில் மக்கள் கருத்தறியும் பயணம் மேற்கொள்ளப்போவதாகவும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன