Advertisement
Advertisement

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன் : ராமதாஸ்

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டதாகவும், அவற்றுக்கு மாற்றாக பா.ம.க. தலைமையில் கட்சிகள் இணைய வேண்டும் என்றும் ராமதாஸ் கூறினார். ஆனால் பா.ஜ.க.வுக்கு அழைப்பில்லை என்ற அவர் விடுதலைச் சிறுத்தைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சிரித்துவிட்டுச் சென்றார்.

 

தமிழக அரசின் கோடிக்கணக்கான ரூபாய் கடன் மற்றும் அதற்கான வட்டி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி முடங்கிவிட்டதாக அவர் தெரிவித்தார். பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைந்தால் அன்புமணியால் தமிழக அரசின் கடனை அடைத்துவிட முடியுமா என்ற கேள்விக்கு, செய்தியாளர் தனியாக வருமாறும் அது குறித்து ஒருமணி நேரம் பேசத் தயாராக இருப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன