அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலி

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன.

குறிப்பாக ஜோரத், தெற்கு சல்மரா, மோரிகான் போன்ற மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி நேற்று ஒரே நாளில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன