அர்விந்த் கெஜ்ரிவால் மீது ஹவாலா மோசடி சுமத்தும் கபில் மிஸ்ரா

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது லஞ்சப் புகார் கூறிய, முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, தற்போது ஹவாலா ஊழல் புகார் ஒன்றையும் அவர் மீது சுமத்தியுள்ளார். டெல்லி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா, அர்விந்த் கெஜ்ரிவால், அமைச்சர் சத்யேந்தரிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு புகார் கூறினார். இதன் தொடர்ச்சியாக, ஹவாலா ஊழலிலும் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பிருப்பதாக, புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் முகஷ் குமார், கடந்த 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை என்ற பெயரில் 2 கோடி ரூபாயை வழங்கியுள்ளார். அவரது நிறுவனம் வாட் வரி கட்டவில்லை என்று ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிறுவனம் என்றும் கபில் மிஸ்ரா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அர்விந்த் கெஜ்ரிவால் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள கபில் மிஸ்ரா, இதன் காரணமாகவே அவர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!