Advertisement

அரியலூர் நகரில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்

அரியலூர் நகரில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு பணிகளில் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை100க்கும் மேற்பட்டோருக்கு, மர்மக்காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் அப்பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் காய்ச்சலால் அரியலூர் நகர மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு பணிகளில் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன