அரசு மருத்துவமனையில் நிலவேம்புக் காசாயம் வழங்கினார் விஜயகாந்த்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நிலவேம்பு கசாயம் வழங்கினார். மாவட்டதலைமை பொது மருத்துவமனையில் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்துப் பேசிய விஜயகாந்த், பின்னர் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கசாயம் ரொட்டி பழம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து பார்வையிடவில்லையே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தான் வந்துள்ளதால் இனி அனைவரும் மருத்துவமனைக்கு வருவார்கள் என்றார்

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுக அரசு டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கும் பணம் வழங்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன