Advertisement

அரசு மருத்துவமனையில் காவல் ஆய்வாளருக்கு கத்திக்குத்து

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், காவல் ஆய்வாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

திருமங்கலம் கிராமத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவரது கணவர் வினோத் தீக்காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பூவரசன், நேற்று வினோத்தை கொல்வதற்காக கத்தியுடன் பாய்ந்துள்ளார்.

இதைத் தடுக்க முயன்ற, பாதுகாப்பு பணியிலிருந்த காவல் ஆய்வாளர் அழகேசன், அவருடன் போராடினார். அப்போது, கத்தி அழகேசனின் கையில் குத்திக் கிழித்து காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து பூவரசனை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன