அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் தயக்கம்

தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 518 பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 500 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 15 ஆயிரத்து 770 இடங்கள் கூடுதலாகும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 2 லட்சத்து 61 ஆயிரத்து 692 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 77 மாணவர்களே தற்போது விண்ணப்பித்து உள்ளனர். இதில் அரசு மற்றும் உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வுக்கு தகுதியான ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 988 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்போது 38 ஆயிரத்து 512 இடங்கள் கலந்தாய்வு தொடங்கும் முன்னரே காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு முடிவுக்குப் பின் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் காலியிடங்கள் இருந்த நிலையில், இந்தஆண்டு 40 ஆயிரம் விண்ணப்பங்களை வாங்க ஆளில்லை என்பதோடு, 79 ஆயிரத்து 967 தனியார் இடங்களும் நிரப்பப்பட வேண்டியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன