அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய சக ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேர்வை முன்கூட்டியே துவக்கியதை தட்டிக்கேட்ட அரசு பள்ளி ஆசிரியையை சக ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்கம்பட்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற இருந்தது. காலை பத்து மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வை, அப்பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் காலை 9 மணிக்கே தொடங்கி மாணவ,மாணவிகளை தேர்வு எழுதச் சென்னதாகக் கூறப்படுகிறது. இதனை அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் உதயசிவசங்கரி என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக ஆசிரியர் திருவேங்கடம் மற்றும் ஆசிரியைகளான சண்முகசுந்தரி, நிர்மலா, ரேவதி, ஆகியோர் மாணவர்களின் முன்னிலையிலேயே உதயசிவசங்கரியை கடுமையாகத் தக்கியதாகக் கூறப்படுகிறது. ஆசிரியை தாக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதுகுறித்து தங்களது பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பள்ளிக்கு சென்ற பெற்றோர், ஆசிரியையை தாக்கிய ஆசியர்களை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போரட்டம் முடிவுக்கு வந்தது. பள்ளி மாணவர்களின் கண்முன்னே ஆசிரியை சக ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் தாக்கிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

One Response to அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய சக ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள்

  1. Kumar சொல்கிறார்:

    தட்டி கேட்டா கெட்டவள் தவறுக்கு உதவினால் நல்லவள். வெட்கமே இல்லாம அந்த ஆசிரியை தாக்கிய அந்த ஆசிரியர்களை மிதியடி கழற்றி அடிக்கனும்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன