அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே நிகழ்ந்த சாதி ரீதியிலான மோதல்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் இரு சமூக மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 10 மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சேந்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று காலை பாமக கொடி நிறத்தில் கையில் வளையங்களை அணிந்து வந்த மாணவர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறத்தில் வளையங்களை அணிந்து வந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த திருநாவலூர் காவல்துறையினர் 10 மாணவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று காலை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் உரையாற்றிய திருநாவலூர் ஆய்வாளர் எழிலரசி, மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன