அரசுப்பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் அரசுப் பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

திருவான்யூரில் காமராஜபுரம் நோக்கி மாநகர அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. கிழக்குக் கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவில் பேருந்து நிறுத்தத்தில், பயணிகளை இறக்கி விடுவதற்காக பேருந்து நின்றது. அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று, அரசுப் பேருந்தின் பின்புறம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன