நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்திற்கு வரவேண்டும் என அக்கட்சியின் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
இதே போன்று சென்னையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டத்திற்கு பின்னர், அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று திமுக கொறடா அர.சக்கரபாணி உத்தரவிட்டு உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன