அரசியல் களத்தில் ரஜினியோடு இணைந்து செயல்பட தயார் – கமல்

தமிழக மக்கள் விரும்பினால், அரசியலுக்கு வர தயார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற “தமிழ் இந்து” நாளிதழ் விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்திற்கும், தமக்கும் தொழில் ரீதியிலான போட்டி இருந்தாலும், முக்கிய பிரச்சினைகளில், இருவரும், ஒருவரையொருவர் சந்தித்து ஆலோசிப்பது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் நுழைந்த பிறகு, ரஜினி ஆசைப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவருடன் இணைந்து செயல்பட தயார் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்…

அரசியல் குறித்து இப்போது பேசினால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஏன் பேசவில்லை என்ற கேள்வி தன் முன் வைக்கப்படுவதாகவும், அப்போது, ஊரே பேசவில்லை என்பதால், ஊரோடு கூடி வாழ்ந்த தாமும் பேசவில்லை என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இனிமேலும் அரசியல் பேசாமல் இருப்பது நல்லது இல்லை என்ற அடிப்படியிலேயே, கருத்துகளை தெரிவித்து வருவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன