அமைச்சர் விஜயபாஸ்கர் படம் இல்லாத பேனர் அகற்றம்

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் படம் இல்லாமல் வைக்கப்பட்ட பேனர் அகற்றபட்டதை கண்டித்து, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை வரவேற்று பேனர் வைக்கப்பட்டது. அண்ணாசிலை அருகில் வைக்கப்பட்ட பேனரில் அமைச்சர் விஜயபாஸ்கர் படம் இல்லாததால், அதை அவரது ஆதரவாளர்கள் அகற்றியுள்ளனர்.

இதனைக் கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் இல்லத்திலிருந்து அமைதி ஊர்வலம் சென்ற பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அண்ணாசிலை அருகே மீண்டும் புதிய பேனரை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன