அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும் – புதின்

ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மீது அண்மையில் புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளதையடுத்து, அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு ரஷ்யா அறிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் உறவுகள் மேம்பட எந்த உடனடியான வாய்ப்பும் இல்லை என்றும் இந்த உறவுகள் மேம்பட நீண்ட காலம் ஆகலாம் என்று அதிபர் புதின் கூறியுள்ளார். தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவில் பணியாற்றி வருவதாகவும், இதில் 755 பேரை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய அதிபர் புதினின் தலையீடு இருந்ததாக அமெரிக்காவில் சர்ச்சை எழுந்த நிலையில் அமெரிக்க செனட் சபை ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதாவை நிறைவற்றியதை யடுத்து ரஷ்யாவுக்கு அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன