அமெரிக்காவுக்கான H-1B விசா பரிசீலனை மீண்டும் தொடங்கியது

அமெரிக்காவுக்கு வேலை நிமித்தம் செல்வதற்கான H-1B பிரீமியம் விசா பரிசீலனை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்திய மென்பொறியாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் H-1B பிரீமியம் விசா பரிசீலனை கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஐந்து மாதங்கள் கழிந்துள்ள நிலையில் மீண்டும் தொடங்கியுள்ள விசா பரிசீலனை, அமெரிக்க நாடாளுமன்றம் வழங்கிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்றும், இதன்படி வருடத்திற்கு 65,000 விசாக்களும் கூடுதலாக 20,000 விசாக்களும் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இது பொருந்தாது எனவும், இது 2018 ஆம் நிதி ஆண்டுக்கான விசா பரிசீலனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன