அமெரிக்காவில் இரவு பகலாக பற்றி எரியும் காட்டுத் தீ

அமெரிக்காவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் சாண்டா பார்பரா (( Santa Barbara)) பகுதிக்கு அருகே Los Padres தேசிய வனப்பகுதிக்குட்பட்ட, மரங்கள் அடர்ந்த பகுதியில் தீப்பற்றியது. காட்டுத் தீயில் இதுவரை 17 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பிலான மரங்கள் எரிந்து சாம்பலாகின. வறட்சியால் நேரிட்ட இந்த தீயை அணைக்கும் முயற்சிகளில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பலத்த காற்றின் காரணமாக, தீயணைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும், தீயை அணைக்க வீரர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!