அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத் தீ

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

டெக்சாஸின் பாஸ்ட்ராப் (BASTROP) பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தினால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தரையிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் மூலமாகவும், வான்வழியே ஹெலிகாப்டர் மூலமாகவும் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீயினால் யாருக்கும் காயமில்லை என்ற போதும், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாகி விட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!