அமித்ஷா, மோடியால் கர்நாடகத்தில் ஆட்சிமாற்றம் நிகழாது என சித்தராமையா உறுதி

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது மத்திய பாஜக அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை ஏவிவிட்டு சோதனைகளை நடத்துவதற்கு முதல் அமைச்சர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். கலாபுராகியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜக தலைவர்கள் என்ன அரிச்சந்திர வாரிசுகளா என்று கேள்வி எழுப்பினார். அமித் ஷா அல்ல மோடியே வந்தாலும் கர்நாடகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்று கூறிய அவர் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்லை என்று தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன