அமர்நாத் விபத்து – உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

அமர்நாத் பக்தர்கள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயம் அடைந்த 27 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன