அமராவதி நகரம் வாழ்வதற்கு உகந்த மகிழ்ச்சியான இடமாக இருக்கும் – சந்திரபாபு நாயுடு

அமராவதி நகரம் வாழ்வதற்கு உகந்த மகிழ்ச்சியான இடமாக இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் புதிய தலைநகராக கிருஷ்ணா நதிக்கரையில் அமைய உள்ள அமராவதி, காற்று மாசுபாடு இல்லாத தூய்மையான பசுமையான நகராக இருக்கும் என்றும், இங்கு வாழும் மக்களின் மகிழ்ச்சி குறியீட்டு எண் மிக அதிகமாக இருக்கும் என்றும் ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார். 30 சதவீத பகுதி நீர் மற்றும் பசுமைப்பகுதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் வாகனப் போக்குவரத்தும் 100 சதவீதம் வைஃபை வசதியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கம்பிகள், மொபைல் டவர்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது. நெதர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் பல்வேறு கட்டுமானப் பணிகளை நிறைவேற்ற உள்ளன. ஆந்திர கலாச்சாரம், வரலாறு, பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கட்டிடங்கள் அமைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

One Response to அமராவதி நகரம் வாழ்வதற்கு உகந்த மகிழ்ச்சியான இடமாக இருக்கும் – சந்திரபாபு நாயுடு

  1. rary சொல்கிறார்:

    Amaravati should contain some torist places inorder to get improved in a short period of time. There is no airport which is essential for one of the developing StateCapital…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன