அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர்

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் தடுப்பணையை வந்தடைந்தது.

அமராவதி அணையில் இருந்து கடந்த 26-ஆம் தேதி குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீரை திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் விவசாயத்துக்காக மடை வெட்டி திருப்பிக்கொண்டதாக புகார் எழுந்தது. இதனால் தங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்று கூறி கரூரில் பொதுமக்கள், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்துவிட மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

இதன்படி திறந்துவிடப்பட்ட தண்ணீர் செட்டிப்பாளையம் தடுப்பணையை அடைந்ததையடுத்து கரூருக்கு விரைவில் குடிநீர் விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன