அனிதா தற்கொலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஆட்சியர்க்கு தேசிய ஆதி திராவிடர் நல ஆணையம் வலியுறுத்தல்

மாணவி அனிதா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, தேசிய ஆதி திராவிடர் நல ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்திற்கு சென்ற, தேசிய ஆதி திராவிடர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் தலைமையிலான குழு, அனிதாவிற்கு யாரேனும் அழுத்தம் தந்தார்களா என்பது குறித்து விசாரனை நடத்தியது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், அனிதாவின் தற்கொலை குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி, 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *