Advertisement

அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இந்தியாவின் 3வது பெரிய இயக்கம் என்ற நிலையில் இருந்து சிறிதும் இறங்கக்கூடாது என்று அதிமுகவினரை வலியுறுத்திய சசிகலா, எஃகு கோட்டையில் விரிசல் விழுந்துவிடாதா, தடி ஊன்றியாவது எழுந்து நிற்க முடியுமா என்று எதிரிகள் எண்ணிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.முன்பை விட உறுதியாக கட்சியையும் தமிழகத்தையும் காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்டுள்ள இடைவெளியை எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும், ஜெயலலிதா இருந்த போது எந்த வகை பாதுகாப்பையும் தாயின் பரிவையும் அதிமுக தொண்டர்கள் உணர்ந்தார்களோ அதை இப்போதும் உணரலாம் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன