அதிமுக இரு அணிகளின் இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பன்னீர் செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். பன்னீர் செல்வம் அணியினர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால், தயாராக இருப்பதாக அவர் கூறினார். வைத்தியலிங்கம் தலைமையிலான குழுவில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வீரமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே பன்னீர்செல்வம் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அணியினர், பேச்சுவார்த்தைக்கு தங்கள் தரப்பும் தயார் என்றனர். பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாகவும் அவர்கள் கூறினார். இந்நிலையில் இரவு 8.40 மணி வரை நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக பன்னீர் செல்வம் அணியினர் அறிவித்தனர். அந்த குழுவுக்கு கே.பி.முனுசாமி தலைமை தாங்குவார் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன