அதிமுகவில் டிடிவி தினகரன் நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஆயத்தம்

அதிமுக அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறுகிறது.

இரு அணிகள் இணைப்புக்கு 60 நாட்கள் அவகாசம் கொடுப்பதாகக் கூறிய டிடிவி தினகரன், பின்னர் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கினார். 60 நாட்கள் அவகாசம் முடியவுள்ள நிலையில், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதன் காரணமாக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதையடுத்து திங்களன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், அதிமுக அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினகரன் கட்சிக்குள் நுழைந்தால் அவரது செயல்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்வது, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியுடன் இணைவது உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன