Advertisement
Advertisement

அதிகரிக்கும் குரங்குகள் தொல்லையால் மக்கள் அச்சம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கவரை தெரு, பஜனை கோயில் தெரு, பாலுஉடையார் தெரு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. கடைகளுக்கு சென்றுவரும்போது இந்த குரங்குகள் கையில் உள்ள பொருட்களை பறித்துச் செல்கின்றன.

மின்சார கம்பிகளிலும், தொலைக்காட்சி கம்பிகளிலும் குரங்குகள் ஏறி விளையாடுவதால் மின்சாதனப் பொருட்கள் சேதம் அடையும் அபாயம் இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர்.

வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன