அண்ணா பல்கலை.யில் தொழில்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 583 பொறியியல் கல்லூரிகளில் 6 ஆயிரத்து 224 தொழில்பிரிவு படிப்பு இடங்கள் உள்ளன.

இதற்கு விண்ணப்பித்தவர்களில் 2 ஆயிரத்துக்கு 83 பேர் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு 315 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 2 பேர் மட்டுமே தொழில்பிரிவு படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒருவர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றார். இதையடுத்து, மதியம் 12 மணிக்கு தொழில்பிரிவில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கலந்தாய்வில் பங்கேற்க ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று கலந்தாய்வுக்கு வந்தவர்களுக்கு உதவும் வகையில் தகவல் மையத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட செய்யவில்லை என்றும் மாணவ, மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன