அசாம் மக்களை மீண்டும் அச்சுறுத்துகிறது வெள்ளம்

அசாம் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மூன்றரை லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர்.

அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தேமாஜி (Dhemaji), லக்கிம்பூர் (Lakhimpur), பக்ஸா (Baksa), சிராங் (Chirang) உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள 781 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரம்மபுத்திரா, தன்சிரி, ஜியா பராலி, ஆகிய நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 20 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 14ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன