ஃபேஸ்புக் பதிவுகளை ஆதாரமாக காட்டி, குழந்தைத் திருமணத்தில் இருந்து பெண் விடுதலை

ராஜஸ்தான் மாநிலத்தில் ஃபேஸ்புக் பதிவுகளை ஆதாரமாக காட்டி, குழந்தைத் திருமணத்தில் இருந்து ஒரு பெண் விடுதலை பெற்றுள்ளார். பிஷ்ணோ என்ற பெண்ணுக்கு, 2010-ஆம் ஆண்டு 12 வயதில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

அவருக்கு தற்போது 19 வயதாகும் நிலையில் கணவனுடன் சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் கணவனின் குடிபழக்கம் மற்றும் நடத்தை சரியின்மை காரணமாக சேர்ந்து வாழ விரும்பாத பிஷ்ணோ திருமணத்தை ரத்து செய்யக் கோரி சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் கணவன் குடும்பத்தினர் அதனை ஏற்காத நிலையில், கணவனின் ஃபேஸ் புக்கில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டு இடப்பட்ட பதிவுகளை பிஷ்ணோ நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பித்தார். இதனை ஆய்வு செய்த நீதிமன்றம் பிஷ்ணோவின் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன